கர்நாடகா மற்றும் தமிழக காவிரி ஆற்று வனப்பகுதியில் பெய்து வரும் மழையை பொறுத்துமேட்டூர் அணைக்கு நீர்வரத்து கடந்த சில நாட்களாக ஏற்ற இறக்கத்தில் இருந்து வருகிறது. அணைக்கு நேற்று முன்தினம் விநாடிக்கு 555 கனஅடியாக இருந்த நீர்வரத்து நேற்று 492 கனஅடியாக குறைந்தது.
அணையில் இருந்துவிநாடிக்கு 750 கனஅடி தண்ணீர் திறந்துவிடப் பட்டுள்ளது. நேற்று முன்தினம் 96.90 அடியாக இருந்த நீர்மட்டம் நேற்று 96.80 அடியானது. நீர் இருப்பு 60.80 டிஎம்சி-யாக உள்ளது.