Regional01

சேவல் சண்டை நடத்திய 3 பேர் மீது வழக்கு :

செய்திப்பிரிவு

கரூர் அருகேயுள்ள வெண்ணெய் மலை சுப்பிரமணியபுரத்தில் சட்டவிரோதமாக சேவல் சண்டை நடத்தப்படுவதாக வெங்கமேடு போலீஸாருக்கு தகவல் வந்தது. இதையடுத்து, போலீஸார் அங்கு சென்று சோதனை நடத்தினர். அப்போது, சேவல் சண்டை நடத்திய தினேஷ்(18), விஜயகுமார்(23), அருண்பாண்டியன்(26) ஆகியோர் அங்கிருந்து தப்பி யோடிவிட்டனர். அவர்கள் 3 பேர் மீதும் தொற்றுநோய் பரவல் தடுப்புச்சட்டம் உள்ளிட்ட 3 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து, தலைமறைவான மூவரையும் தேடி வருகின்றனர்.

SCROLL FOR NEXT