தென்னூர் உழவர் சந்தை மைதானத்தில் நேற்று மரக்கன்றை நட்டுவைத்து தண்ணீர் ஊற்றுகிறார் அமைச்சர் கே.என்.நேரு. உடன் ஆட்சியர் சு.சிவராசு உள்ளிட்டோர். 
Regional01

திருச்சி மாவட்டத்தில் உள்ள - அனைத்து நகராட்சி, பேரூராட்சிகளிலும் மரக் கன்றுகள் நட்டு பராமரிக்கப்படும் : அமைச்சர் கே.என்.நேரு தகவல்

செய்திப்பிரிவு

திருச்சி மாவட்டத்தில் உள்ள அனைத்து நகராட்சி, பேரூராட்சி களிலும் மரக் கன்றுகள் நட்டு பராமரிக்கப்படும் என மாநில நகர்ப் புற வளர்ச்சித் துறை அமைச்சர் கே.என்.நேரு தெரிவித்துள்ளார்.

மறைந்த முன்னாள் முதல்வர் மு.கருணாநிதியின் 98-வது பிறந்த நாள் மற்றும் சுற்றுச்சூழல் நாள் விழாவையொட்டி, திருச்சி மாவட்டத்தில் 1.25 லட்சம் மரக்கன்றுகள் நடும் விழா நேற்று நடைபெற்றது.

மாவட்ட ஆட்சியர் சு.சிவராசு தலைமையில் திருச்சி தென்னூர் உழவர் சந்தை மைதானத்தில் அமைச்சர் கே.என்.நேரு மரக்கன்று கள் நட்டுவைத்து பணிகளைத் தொடங்கி வைத்தார்.

தொடர்ந்து, செய்தியாளர் களிடம் அமைச்சர் கூறியது: சுற்றுச்சூழலைப் பாதுகாக்கும் நோக்கில், முதல்கட்டமாக திருச்சி மாநகரில் சாலையோரங்களில் மின் கம்பிகள் செல்லாத இடங்களில் 25,000 மரக்கன்றுகள் நடும் பணி தொடங்கிவைக்கப்பட்டுள்ளது. மரக்கன்றுகள் நடுவதுடன் மட்டுமின்றி, அவை சமூக சேவை மற்றும் தன்னார்வ தொண்டு நிறுவனங்களிடம் ஒப்படைக் கப்பட்டு பராமரிக்கப்படவுள்ளன.

திருச்சி மாநகரில் பயன்பாட் டில் இல்லாத மாநகராட்சி பூங்காக்களில் மியாவாக்கி முறையிலான அடர் காடு வளர்ப்புத் திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. மாநகராட்சிப் பகுதி மட்டுமன்றி அனைத்து நகராட்சி, பேரூராட்சி பகுதிகளிலும் மரக் கன்றுகள் நடப்பட்டு, முறையாக பராமரிக்கப்படும் என்றார்.

தொடர்ந்து, லால்குடி வட்டம் பல்லவபுரத்தில் 8 ஏக்கரில் 46 வகையான 1 லட்சம் நாட்டு மரங்கள் கொண்ட மியாவாக்கி முறையிலான அடர்காடு வளர்க்கும் பணியை அமைச்சர் கே.என்.நேரு தொடங்கிவைத்தார்.

இந்நிகழ்ச்சிகளில் எம்எல்ஏ-க் கள் அ.சவுந்தரபாண்டியன், எஸ்.ஸ்டாலின்குமார், மாவட்ட வன அலுவலர் சுஜாதா, மாநகராட்சி ஆணையர் சிவசுப்பிரமணியன், மாநகராட்சி முதன்மைப் பொறி யாளர் அமுதவல்லி, செயற்பொறி யாளர்கள் குமரேசன், சிவபாதம், லால்குடி கோட்டாட்சியர் வைத்தி யநாதன், உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

SCROLL FOR NEXT