Regional02

மரத்தில் கார் மோதி 2 டாக்டர்கள் உயிரிழப்பு :

செய்திப்பிரிவு

தென்காசி மாவட்டம் சங்கரன் கோவிலைச் சேர்ந்தவர் ராம்குமார் (40). இவர், சங்கரன்கோவில் அரசு மருத்துவமனையில் மருத்துவராக பணியாற்றி வந்தார். இதே பகுதியைச் சேர்ந்த சிதம்பரராஜா (45) என்பவர், குருவிகுளம் அரசு மருத்துவமனையில் மருத்துவராக பணியாற்றி வந்தார். இவர்கள், கிருஷ்ணகிரியைச் சேர்ந்த மருத்துவர் முத்துகணேஷ் (29), சங்கரன்கோவிலைச் சேர்ந்த மருந்து விற்பனை பிரதிநிதி கார்த்திக்குமார் (32) ஆகியோருடன் காரில் தென்காசிக்கு வந்தனர்.

அங்கு மருத்துவர்கள் கூட்டத்தில் பங்கேற்று விட்டு, மாலையில் கடையம் நோக்கி காரில் சென்றனர். தென்காசி அருகே திரவிய நகர் அருகில் வந்தபோது கட்டுப்பாட்டை இழந்த கார், சாலையோரத்தில் இருந்த மரத்தில் மோதி விபத்துக்குள்ளானது. இதில், காரை ஓட்டிய மருத்துவர் ராம்குமார் மற்றும் சிதம்பரராஜா ஆகியோர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

படுகாயம் அடைந்த மற்ற இருவரும் தென்காசி அரசு மருத்துவமனைக்கு கொண்டுசெல்லப்பட்டனர். இந்த விபத்து குறித்து பாவூர்சத்திரம் போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தென்காசி அருகே திரவிய நகர் அருகில் வந்தபோது கட்டுப்பாட்டை இழந்த கார், சாலையோரத்தில் இருந்த மரத்தில் மோதி விபத்துக்குள்ளானது.

SCROLL FOR NEXT