TNadu

ஸ்டெர்லைட்டில் உற்பத்தியான : 380 கிலோ வாயு நிலை ஆக்சிஜன் சிலிண்டரில் நிரப்பி விநியோகம் :

செய்திப்பிரிவு

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆக்சிஜன் உற்பத்தி நிலையத்தில் முதலாவது அலகில் கடந்த மாதம் 12-ம் தேதி இரவு மருத்துவ பயன்பாட்டுக்கான திரவ நிலை ஆக்சிஜன் உற்பத்தி தொடங்கியது.

தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டதால், 6 நாட்களுக்கு பிறகு மே 19-ம் தேதி முதல் முழு வீச்சில் திரவ ஆக்சிஜன் உற்பத்தி தொடங்கியது. நேற்று வரை 493.07 மெட்ரிக் டன் திரவ நிலை ஆக்சிஜன் உற்பத்தி செய்யப்பட்டு, டேங்கர் லாரிகள் மூலம் தமிழகம் முழுவதும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

ஸ்டெர்லைட் ஆக்சிஜன் உற்பத்தி நிலையத்தில் வாயு நிலையிலான ஆக்சிஜன் அதிகம் உற்பத்தியானபோதும், அதனை சேமிக்க வழியில்லாமல் வீணாக காற்றில் கலந்தது. வீணாகும் வாயுநிலை ஆக்சிஜனை சிலிண்டர்களில் அடைத்து விநியோகம் செய்வதற்கான பாட்டிலிங் பிளான்ட் வசதியை ஸ்டெர்லைட் நிறுவனம் ரூ.11 கோடியில் நிறுவியது.

இந்த பிளான்ட் கடந்த 3-ம் தேதி செயல்பாட்டுக்கு வந்தது. இங்கு நேற்று காலை 8 மணி வரையிலான 24 மணி நேரத்தில் 260 மெட்ரிக் டன் வாயு நிலையிலான ஆக்சிஜன் உற்பத்தி செய்யப்பட்டுள்ளது. இதில், 380 கிலோ ஆக்சிஜன் மட்டும், 38 சிலிண்டர்களில் நிரப்பப்பட்டு தூத்துக்குடியில் உள்ள தனியார் ஆக்சிஜன் விநியோக நிறுவனத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

SCROLL FOR NEXT