Regional02

மருத்துவ அதிகாரிக்கு கொலை மிரட்டல் விடுத்தவர் கைது :

செய்திப்பிரிவு

தேனி கேஆர்ஆர் நகரைச் சேர்ந் தவர் எஸ்.ராதா (56). அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவ மனையில் நிலைய மருத்துவ அதிகாரியாக உள்ளார். இவரது வீட்டில் தவமணி (47) என்பவர் வாடகைக்கு குடியிருந்து வருகிறார். அவர் வீட்டை காலி செய்யாததால் இருவருக்கும் இடையே தகராறு இருந்து வந்தது. இந்நிலையில், தன்னை அவதூறாக பேசி, கொலை மிரட்டல் விடுத்ததாக தவமணி மீது ராதா புகார் தெரிவித்தார். தவமணியை தேனி போலீஸார் கைது செய்தனர்.

SCROLL FOR NEXT