Regional01

கரோனா தொற்றாளர்களுக்கு பாரம்பரிய உணவுகள் : புதுக்கோட்டை மாவட்ட சித்த மருத்துவ அலுவலர் தகவல்

செய்திப்பிரிவு

புதுக்கோட்டை கரோனா சித்த மருத்துவ சிகிச்சை மையத்தில் தொற்றாளர்களுக்கு பாரம்பரிய உணவுகள் வழங்கப்படுவதாக மாவட்ட சித்த மருத்துவ அலுவலர் உம்மல் கதீஜா தெரிவித்தார்.

புதுக்கோட்டை அரசு மகளிர் கலைக் கல்லூரி வளாகத்தில் செயல்படும் கரோனா சித்த மருத்துவ சிகிச்சை மையத்தில் கரோனா தொற்றாளர்களுக்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது. மாவட்ட சித்த மருத்துவ அலுவலர் உம்மல் கதீஜா, சித்த மருத்துவ சிகிச்சை மைய அலுவலர் ஆ.மாமுண்டி ஆகியோர் ஆலோச னையில் மருத்துவர்கள் சிகிச்சை அளித்து வருகின்றனர்.

இதுகுறித்து உம்மல் கதீஜா கூறியது: கரோனா தொற்றாளர் களுக்கு சித்த மருத்துவ முறைப் படி அமுக்கரா சூரண மாத்திரை, நெல்லிக்காய் லேகியம், தாளிசாதி சூரணம், பிரமானந்த பைரவ மாத் திரை, ஆடாதொடை மணப்பாகு, கபசுர குடிநீர், கிராம்புகுடிநீர், ஓமக்குடிநீர், மூலிகைத் தாம்பூலம், ஓமப் பொட்டணம் உள்ளிட்டவை வழங்கப்படுகின்றன.

மேலும், 8 வடிவ நடை பயிற்சி, திருமூலர் பிரணாயாமம், சுயவர்ம பயிற்சி, யோக முத்திரை பயிற்சியும் அளிக்கப்படுகின்றன.

மாப்பிள்ளை சம்பா அரிசி, கேழ்வரகு, குதிரைவாலி, கம்பு, தினை, சாமை, வரகு, முளைகட் டிய பயறு வகைகள், இயற்கை தானியங்கள் வழங்கப்படுகின்றன. பாரம்பரிய உணவுகள் எப்போ தும், பாதுகாப்பானவை. மேலும், ரத்த அழுத்தம், சர்க்கரை நோய், உடற் பருமன் ஏற்படாமல் தடுக் கும் வழிமுறைகள் குறித்து ஆலோ சனை வழங்கப்படுகிறது என்றார்.

SCROLL FOR NEXT