Regional01

மருத்துவமனையில் எம்எல்ஏ ஆயு்வு :

செய்திப்பிரிவு

அரியலூர் மாவட்டம் உடையார் பாளையம் அரசு மருத்துவ மனையில் ஜெயங்கொண்டம் எம்எல்ஏ க.சொ.க.கண்ணன் நேற்று ஆய்வு மேற்கொண்டார்.

உடையார்பாளையம் அரசு மருத்துவமனையில் உள் மற்றும் வெளி நோயாளிகள் பிரிவுகளை ஆய்வு செய்த எம்எல்ஏ கண்ணன், கரோனா சிகிச்சை பிரிவில் மருத்துவ வசதி, தடுப்பூசிகள் போதுமான அளவில் உள்ளதா என கேட்டறிந்தார். தொடர்ந்து, மருத்துவமனையில் நோயாளி களின் குடிநீர் வசதிக்காக குடிநீர்த் தொட்டி அமைக்க பேரூராட்சி நிர்வாக அலுவலர்களிடம் அறிவுறுத்தினார். பின்னர், உடையார்பாளையம் பேரூராட்சி அலுவலகத்தில் தூய்மைப் பணியாளர்களுக்கு கையுறை, முகக்கவசம், கிருமிநாசினிகள் உள்ளிட்டவற்றை வழங்கினார்.

ஆய்வின்போது, மருத்துவ மனை முதன்மை மருத்துவ அலுவலர் இளவரசன், உடையார் பாளையம் பேரூராட்சி செயல் அலுவலர் உஷா உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

SCROLL FOR NEXT