திருச்சி ஜங்ஷன் ரயில் நிலையத் தில் ரயில்வே போலீஸார் நேற்று ரோந்து பணியில் ஈடுபட்டி ருந்தனர். அப்போது முதல் பிளாட் பாரத்தில் கேட்பாரற்றுக் கிடந்த சூட்கேஸூக்குள் தலா 2 கிலோ எடையுள்ள 30 பொட்டலங்களில் கஞ்சா இருப்பது தெரியவந்தது. ரயில்வே போலீஸார் அவற்றைக் கைப்பற்றி போதைப்பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு போலீஸாரிடம் ஒப்படைத்தனர். இது குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது.