Regional02

திருச்சி நீதிமன்றத்தில் தடுப்பூசி முகாம் :

செய்திப்பிரிவு

திருச்சி ஒருங்கிணைந்த நீதி மன்ற வளாகத்திலுள்ள மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக் குழு அலுவலகத்தில் கரோனா தடுப்பூசி முகாம் நேற்று முன்தினம் நடைபெற்றது. மாவட்ட முதன்மை நீதிபதி ஒய்.கிளாட்ஸ்டன் பிளசட் தாகூர் தடுப்பூசி செலுத்திக் கொண்டு முகாமைத் தொடங்கி வைத்தார். இதில் நீதிபதிகள், நீதித்துறை பணியாளர்கள், வழக்கறிஞர்கள் மற்றும் அவர்களின் குடும்பத்தினர் என 341 பேர் தடுப்பூசி செலுத்திக் கொண்டனர்.

SCROLL FOR NEXT