குடியுரிமை சட்டத்துக்கு எதிராக தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சார்பில் இணையவழி போராட்டம் நடத்தப்பட்டது. மாநில மேலாண்மை குழு தலைவர் எம்.எஸ். சுலைமான் முகநூல் வழியாக கண்டன உரையாற்றினார். திருநெல்வேலி மாவட்ட தலைவர் கே.ஏ.ஓ. சாதிக் தலைமையில் மாவட்ட த்தில் 32 கிளைகளிலும் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் வீட்டில் இருந்தபடியே பதாகைகளை ஏந்தி இணையம் வழியாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.