ஆரணியில் நாடக கலைஞர்களுக்கு நிவாரண பொருட்களை வழங்கிய நடிகர் பாலாஜி. 
Regional02

நாடக கலைஞர்களுக்கு நிவாரணம் :

செய்திப்பிரிவு

ஆரணியில் வாழ்வாதாரமின்றி பாதிக்கப்பட்டுள்ள நாடக கலைஞர்களுக்கு நிவாரணப் பொருட்களை நடிகர் பாலாஜி வழங்கினார்.

தி.மலை மாவட்டம் ஆரணி மற்றும் சுற்றுப்புற பகுதியில்வசிக்கும் நாடக கலைஞர்கள் வாழ்வாதா ரமின்றி பாதிக்கப்பட் டுள்ளனர். கரோனா ஊரடங்கு காரணமாக, கோயில் திருவிழாக் கள் தடைபட்டு போனதால், நாடகங்களை நடத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதனால், வருமானமின்றி மாற்றுத் தொழிலுக்கு நாடக கலைஞர்கள் தள்ளப்பட்டுள்ளனர்.

ஊரடங்கு காலத்தில் தங்களுக்கு உதவிட வேண்டும் என தமிழக அரசு மற்றும் நடிகர் சங்கத்துக்கு வேண்டுகோள் விடுத்திருந்தனர். இதன் எதிரொலியாக, நூற்றுக்கும் மேற்பட்ட நாடக கலைஞர்களுக்கு நடிகர் பூச்சி முருகன் சார்பில் வழங்கப்பட்ட அரிசி உள்ளிட்ட நிவாரணப் பொருட் களை நடிகர் பாலாஜி நேற்று வழங்கினார்.

மேலும், ஆரணி நகரில் தூய்மைப் பணியில் ஈடுபட்டுள்ள தொழிலாளர்களுக்கும் நிவாரணம் வழங்கப்பட்டது.

SCROLL FOR NEXT