நாட்டின் அந்நிய செலாவணி கையிருப்பு 60 ஆயிரம் கோடி டாலராக உயரும் என்று ரிசர்வ் வங்கி கவர்னர் சக்திகாந்த தாஸ் தெரிவித்துள்ளார்.
மே 28-ம் தேதியுடன் முடிவடைந்த வாரத்தில் நாட்டின் அந்நிய செலாவணி கையிருப்பு 2,865 கோடி டாலர் அதிகரித்து 59,289 கோடி டாலராக உயர்ந்துள்ளது. தற்போது வெளிநாட்டு முதலீடுகள் அதிக அளவில் வரத் தொடங்கியுள்ளன. இதனால் அந்நிய செலாவணி கையிருப்பு 60 ஆயிரம் கோடி டாலரைத் தாண்டும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
கரோனா பரவலால் முடங்கிய துறைகளை ஊக்குவிக்க தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன என்றும் அவர் தெரிவித்தார்.-பிடிஐ