சாத்தான்குளம் வியாபாரிகள் ஜெயராஜ், அவரது மகன் பென் னிக்ஸ் ஆகிய 2 பேர் போலீஸ் விசாரணையின்போது உயிரிழந்தது தொடர்பாக, மதுரை கூடுதல் மாவட்ட நீதிமன்றத்தில் நடந்து வரும் வழக்கு விசாரணைக்கு தடைவிதிக்க உச்ச நீதிமன்றம் மறுத்துள்ளது.
தூத்துக்குடி மாவட்டம் சாத் தான்குளத்தைச் சேர்ந்த வியா பாரி ஜெயராஜ், அவரது மகன் பென்னிக்ஸ் ஆகியோர் கடந்த ஆண்டு ஜூன் 19-ம் தேதி விசா ரணைக்காக காவல் நிலையத்துக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். அப்போது போலீஸார் தாக்கியதில் இருவரும் உயிரிழந்த விவகாரம் நாடுமுழுக்க அதிர்வலைகளை ஏற்படுத்தி இருந்தது. இது தொடர் பான வழக்கை சிபிஐ விசாரித்து வருகிறது. இந்த வழக்கில் சாத்தான்குளம் காவல் ஆய்வாளர் தர், சார்பு ஆய்வாளர்கள் ரகு கணேஷ், பாலகிருஷ்ணன் உட்பட 10 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களில் பால்துரை என்பவர் கரோனா தொற்று பாதிப்பால் உயிரிழந்தார். தர் உட்பட 9 பேரும் மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.
இந்த வழக்கின் விசாரணை மதுரையில் உள்ள கூடுதல் மாவட்ட நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. வழக்கில் சிபிஐ தரப்பில் குற்றப் பத்திரிகை தாக்கல் செய்யப்பட் டுள்ளது. குற்றம்சாட்டப்பட்டுள்ள 9 பேருக்கும் 2,027 பக்க குற்றப் பத்திரிகை நகல் வழங்கப்பட் டுள்ளது. தர் உட்பட 9 பேர் மீது குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
இதனிடையே, சார்பு ஆய்வாளர் ரகு கணேஷ், காவலர்கள் முருகன், முத்துராஜா, தாமஸ் பிரான்சிஸ் ஆகியோர் ஜாமீன் கேட்டு உயர் நீதிமன்ற மதுரை கிளையில் மனு தாக்கல் செய்தனர். அந்த மனுக் களை தள்ளுபடி செய்து, உயர் நீதிமன்ற நீதிபதி நிர்மல்குமார் உத்தரவிட்டிருந்தார். மேலும், வழக்கு விசாரணையை குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் முடிக்க உத்தரவிட வேண்டும் என்று ஜெய ராஜின் மனைவி செல்வராணி, உயர் நீதிமன்ற மதுரை கிளையில் மனு தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவை விசாரித்த நீதிபதி முரளிசங்கர், மதுரை மாவட்ட நீதி மன்றம் இந்த வழக்கின் விசா ரணையை 6 மாதத்தில் முடிக்க வேண்டும் என்று உத்தர விட்டிருந்தார்.
இந்நிலையில், மதுரை மாவட்ட நீதிமன்றத்தில் நடைபெறும் வழக்கு விசாரணைக்கு தடை விதிக்கக் கோரி உச்ச நீதிமன்றத்தில் சார்பு ஆய்வாளர் ரகு கணேஷ் மனு தாக்கல் செய்திருந்தார். இந்த மனு, உச்ச நீதிமன்ற நீதிபதிகள் பி.ஆர்.கவாய், கிருஷ்ணா முராரி ஆகியோரைக் கொண்ட அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தது.
அப்போது, மதுரை மாவட்ட நீதிமன்றத்தில் நடக்கும் வழக்கு விசாரணைக்கு தடை விதிக்க நீதிபதிகள் மறுத்து விட்டனர்.
ஏற்கெனவே ஆய்வாளர் தர் ஜாமீன் கேட்டு தாக்கல் செய்த மனு, உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. அந்த மனுவுடன் சேர்த்து இந்த மனுவும் விசாரிக்கப்படும் என நீதிபதிகள் தெரிவித்தனர்.