TNadu

கரோனா தொற்றுப் பரவலை தடுக்க - தகுதியான கைதிகளை பரோலில் விடுவிக்க நடவடிக்கை : சட்டத் துறை அமைச்சர் எஸ்.ரகுபதி தகவல்

செய்திப்பிரிவு

கரோனா பரவலைத் தொடர்ந்து சிறை கைதிகளை ஜாமீனில் விடுவிப்பது, பரோல் வழங்குவது உள்ளிட்டவை தொடர்பாக சென்னைஉயர் நீதிமன்றம் தாமாக முன்வந்து வழக்கை விசாரணைக்கு எடுத்துள்ளது.

இந்த வழக்கில், சிறை பணியாளர்கள், கைதிகளுக்கு தடுப்பூசி செலுத்துவதில் முன்னுரிமை அளிக்க வேண்டும். சிறைகளில் கரோனா பரவலை தடுக்க கைதிகளை பரோலில் விடுப்பது தொடர்பாக, உயர் நீதிமன்ற உத்தரவுக்காக காத்திருக்காமல், தமிழ்நாடு சட்டப்பணி ஆணைக்குழு உறுப்பினர் செயலர் தலைமையிலான உயர்மட்ட குழு, அவர்களை பரோலில் விட நடவடிக்கை எடுக்க வேண்டும் என நீதிமன்றம் உத்தரவிட்டது.

இந்நிலையில், புதுக்கோட்டை மாவட்ட சிறையில் நேற்று நடைபெற்ற கைதிகளுக்கான தடுப்பூசி முகாமை சட்டத் துறை அமைச்சர் எஸ்.ரகுபதி ஆய்வு செய்த பின்பு செய்தியாளர்களிடம் கூறியதாவது:

கரோனா பரவலை தடுக்கும் வகையில், சிறையில் உள்ள கைதிகளில், பரோலில் விடுவதற்கு தகுதி உள்ளவர்கள் குறித்து கணக்கு எடுக்கப்படுகிறது. எனினும், தீவிரவாத செயல்கள் போன்ற குற்றங்களில் ஈடுபட்டவர்களை பரோலில் விடுவதற்கு வாய்ப்பு இல்லை. சிறைச்சாலைகளில் 57 சதவீதம் கைதிகளே உள்ளனர்.

கரோனா காலத்தில் சிறையில்உள்ள கைதிகளின் எண்ணிக்கையை குறைக்க தேவையானநடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. தமிழக சிறைச்சாலையில் உள்ள கைதிகளில் இதுவரை1,700 பேர் தாமாக முன்வந்து தடுப்பூசி போட்டுக் கொண்டுள்ளனர்.

SCROLL FOR NEXT