TNadu

கருப்பு பூஞ்சை நோய்க்கு மேலும் ஒருவர் உயிரிழப்பு :

செய்திப்பிரிவு

புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடி அருகே குப்பக்குடியைச் சேர்ந்தவர் சந்திரமோகன்(60). கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு, புதுக்கோட்டை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த இவருக்கு, கருப்பு பூஞ்சை நோய்க்கான அறிகுறி இருந்ததால், தஞ்சாவூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு அவர் சிகிச்சை பலனின்றி நேற்று உயிரிழந்தார்.

இதற்கு முன்பு, ஆலங்குடி அருகே வெள்ளை கொல்லையைச் சேர்ந்த ஒருவர் கருப்பு பூஞ்சை நோயால் பாதிக்கப்பட்டு, மதுரை அரசு மருத்துவமனையில் அண்மையில் உயிரிழந்தார்.

இதனால், இம்மாவட்டத்தில் கருப்பு பூஞ்சையால் உயிர்இழப்பு எண்ணிக்கை 2 ஆக உயர்ந்துள்ளது.

SCROLL FOR NEXT