மேற்கு மண்டல காவல் துறையின்புதிய ஐ.ஜி.யாக ஆர்.சுதாகர் நேற்று பொறுப்பேற்றுக்கொண்டார். கோவை சரக டி.ஐ.ஜி.யாக எம்.எஸ்.முத்துசாமி பொறுப்பேற்றார்.
கோவை மேற்கு மண்டல காவல் துறை ஐ.ஜி.யாக பணிபுரிந்தவர்அமல்ராஜ். இவர் சமீபத்தில் கூடுதல் டிஜிபியாக பதவி உயர்வு பெற்று சென்னைக்கு பணியிட மாறுதல் செய்யப்பட்டார். அவருக்கு பதிலாக மதுரை சரக டி.ஐ.ஜி.யாக பணிபுரிந்து வந்த ஆர்.சுதாகர், பதவி உயர்வு அளிக்கப்பட்டு, கோவை மேற்கு மண்டல ஐ.ஜி.யாக நியமிக்கப்பட்டார். கோவை ரேஸ்கோர்ஸில் உள்ள மேற்கு மண்டல காவல் துறை தலைமை அலுவலகத்தில் ஆர்.சுதாகர் நேற்று காலை பொறுப்பேற்றுக் கொண்டார். முன்னதாக காவல் துறை சார்பில் அளிக்கப்பட்ட வரவேற்பு மரியாதையை ஏற்றுக் கொண்டார். அவருக்கு காவல் உயர் அதிகாரிகள் வாழ்த்து தெரிவித்தனர்.
கோவை சரக டி.ஐ.ஜி.யாக பதவி வகித்துவந்த கே.எஸ்.நரேந்திரன் நாயர், சென்னை சட்டம் ஒழுங்கு இணை ஆணையராக மாற்றப்பட்டார். திண்டுக்கல் சரக டிஐஜியாக பணிபுரிந்துவந்த எம்.எஸ்.முத்துசாமி, கோவை சரக டிஐஜியாக நியமிக்கப்பட்டு, நேற்று பொறுப்பேற்றுக் கொண்டார்.
கோவை மாநகர காவல் துறையில் நுண்ணறிவு பிரிவு கூடுதல் இணை ஆணையராகபணிபுரிந்துவந்த ரமேஷ்கிருஷ் ணன் நாகப்பட்டினம் கடலோர காவல் படைக்கு மாற்றப்பட்டார். அவருக்கு பதிலாக சேலம் மாவட்ட காவல் துறையில் நில அபகரிப்பு பிரிவுதுணைக் கண்காணிப்பாளராக பணிபுரிந்து வந்த முருகவேல், கோவை மாநகர நுண்ணறிவு பிரிவு உதவி ஆணையராக நியமிக்கப்பட்டார். அவரும் நேற்று காவல் ஆணையர் அலுவலகத்தில் பொறுப்பேற்றுக் கொண்டார்.