Regional02

வேலைவாய்ப்பு பதிவை புதுப்பிக்காதவர்களுக்கு சிறப்பு சலுகை :

செய்திப்பிரிவு

திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:

திருவள்ளூர் மாவட்டத்தில், 2017, 2018, 2019 ஆகிய ஆண்டுகளில் வேலைவாய்ப்பு அலுவலகப் பதிவை பல்வேறு காரணங்களால் புதுப்பிக்கத் தவறிய பதிவுதாரர்கள் பணி வாய்ப்பைப் பெறும் வகையில் மீண்டும் ஒரு முறை புதுப்பித்துக் கொள்ளஏதுவாக சிறப்பு புதுப்பித்தல் சலுகையை தமிழக அரசு வழங்கியுள்ளது.

ஆகவே, இந்த சிறப்பு புதுப்பித்தல் சலுகையைப் பெற விரும்பும் பதிவுதாரர்கள் வரும் ஆக. 27-ம் தேதிக்குள் http://tnvelaivaaippu.gov.in என்ற இணையதளம் வாயிலாக தங்கள் பதிவை புதுப்பித்துக் கொள்ளலாம்.

அவ்வாறு இணைய தளம்வாயிலாக பதிவை புதுப்பிக்கஇயலாதவர்கள் திருவள்ளூர் மாவட்ட வேலை வாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டும் மையத்தை அணுகலாம்.

SCROLL FOR NEXT