திருநங்கைகளுக்கு உணவுப்பொருட்களை வழங்கிய நடிகர் ரம்மி சவுந்தர். 
Regional01

திருப்பரங்குன்றத்தில் திருநங்கைகளுக்கு உணவுப்பொருள்கள் வழங்கிய நடிகர் :

செய்திப்பிரிவு

திருப்பரங்குன்றம் தாலுகா பராசக்தி நகர் குடிசை மாற்று வாரிய குடியிருப்புப் பகுதியில் மாற்றுத்திறனாளிகள், பார்வையற்றோர், திருநங்கைகள் அதிக அளவில் வசிக்கின்றனர். தற்போது கரோனா இரண்டாவது அலை காரணமாக வேலைவாய்ப்பின்றி மிகவும் சிரமப்படுகின்றனர்.

இது பற்றி தகவலறிந்த நடிகர் ரம்மி சவுந்தர், பார்வையற்ற மாற்றுத்திறனாளிகள் மற்றும் திருநங்கைகள் உள்ளிட்டோருக்கு உதவி செய்ய முன்வந்தார். அதன்படி, அரிசி உள்ளிட்ட உணவுப் பொருட்களை சுமார் 63 குடும்பத்தினருக்கு வழங்கினார். கரோனா ஊரடங்கு நேரத்தில் உதவிய நடிகர் ரம்மி சவுந்தரை அப்பகுதியினர் பாராட்டினர்.

SCROLL FOR NEXT