மதுரையில் நேற்று இடியுடன் கூடிய பலத்த மழை பெய்தது. கோடை மழை தொடர்ந்து பெய்து வருவதால் வெயிலின் தாக்கம் தணிந்துள்ளது.
மதுரையில் சில வாரங்களாக கோடை வெயில் சுட்டெரித்தது.
இந்நிலையில் 2 நாட்களாக மழை பெய்து வருகிறது. நேற்று முன்தினம் உசிலம்பட்டி, மதுரை விமான நிலையம், விரகனூர், திருமங்கலம், கள்ளந்திரி மற்றும் நகர் பகுதிகளில் பரவலாக மழை பெய்தது. அதிகபட்சமாக உசிலம்பட்டியில் 65.2 மி.மீ. மழையளவு பதிவானது.
நேற்று பிற்பகல் முதல் மாலை வரை மதுரையில் பெரும்பாலான இடங்களில் இடியுடன் கூடிய பலத்த மழை பெய்தது. சாலைகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது.
நகரில் கோடை வெயில் வாட்டிவதைத்த நிலையில், கடந்த 2 நாட்களாக பெய்து வரும் மழையால் வெப்பம் தணிந்து மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.