Regional01

மேட்டூர் அணைக்கு நீர் வரத்து 671 கனஅடியாக சரிவு :

செய்திப்பிரிவு

மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு விநாடிக்கு 973 கனஅடியில் இருந்து, 671 கனஅடியாக குறைந்தது.

மேட்டூர் அணையின் நீர் மட்டம் நேற்று முன்தினம் 97.13 அடியாக இருந்த நிலையில், அணைக்கு விநாடிக்கு 973 கனஅடி நீர் வந்து கொண்டிருந்தது. அணையில் 61.18 டிஎம்சி நீர் இருப்பு இருந்தது. அணையிலிருந்து குடிநீர் தேவைக்காக, விநாடிக்கு 2 ஆயிரம் கனஅடி நீர் திறக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில் நேற்று நீர்வரத்தில் சரிவு ஏற்பட்டு அணைக்கு விநாடிக்கு 671 கனஅடி நீர் வந்து கொண்டிருந்தது. நீர் வரத்தை விட திறப்பு அதிகமாக இருப்பதால் அணையின் நீர் மட்டம் நேற்று 97.02 அடியாக குறைந்தது. நீர் இருப்பு 61.04 டிஎம்சியாக இருந்தது.

SCROLL FOR NEXT