Regional02

தடுப்பூசிகளை மத்திய அரசு இலவசமாக வழங்க கோரிக்கை :

செய்திப்பிரிவு

கரோனா தொற்றில் இருந்து மக்களை பாதுகாக்க அனைவருக் கும் தடுப்பூசி போடும் வகையில்தடுப்பூசிகளை மாநில அரசுகளுக்கு மத்திய அரசு இலவசமாக வழங்க வேண்டும். கரோனாவால் பாதிக்கப்பட்ட அனைத்து மாநிலங்களுக்கும் பாரபட்சம் இல்லாமல் மத்திய அரசு உதவி செய்யவேண்டும் என வலியுறுத்தி காங்கிரஸ் கட்சியினர் குடியரசு தலைவருக்கு மாவட்ட ஆட்சியர்கள் மூலம் மனு அளிக்க வேண்டும் என அக்கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி வலியுறுத்தினார்.

அதன்பேரில் தூத்துக்குடி மாநகர் மாவட்ட காங்கிரஸ் தலைவர் சி.எஸ் முரளிதரன் தலைமையில் காங்கிரஸார் மாவட்ட ஆட்சியர் கி.செந்தில் ராஜை சந்தித்து மனு அளித்தனர்.

இதேபோல் தெற்கு மாவட்டகாங்கிரஸ் கட்சியினர், தெற்குமாவட்ட தலைவரான வைகுண்டம் எம்எல்ஏ ஊர்வசி எஸ்.அமிர்தராஜ் தலைமையில் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர். அப்போது வைகுண்டம் பேரூராட்சிக்கு நிரந்தர செயல் அலுவலரை நியமிக்க வேண்டும் என வலியுறுத்தி எம்எல்ஏ தனியாக ஒரு மனு அளித்தார்.

வடக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் காமராஜ் தலைமையில் காங்கிரஸார் கோவில்பட்டி கோட்டாட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தனர்.

SCROLL FOR NEXT