நாகப்பட்டினம்: நாகை மகாலட்சுமி நகரில் உள்ள சாய்பாபா கோயிலில், சாயி பாத மெய்யடிமை அறக்கட்டளை சார்பில், தூய்மைப் பணியாளர்கள் 100 பேருக்கு நிவாரணப் பொருட்கள் வழங்கும் நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. சாயி பாத மெய்யடிமை அறக்கட்டளை நிர்வாகி பரமேஸ்வரன் வரவேற்றார். வட்டாட்சியர் ஜெயபாலன் முன்னிலை வகித்தார். நகராட்சி ஆணையர் ஏகராஜ் நிவாரணப் பொருட்களை வழங்கினார். அறக்கட்டளை தொடர்பு அலுவலர் சத்தியசீலன் நன்றி கூறினார்.