Regional01

மூதாட்டியிடம் நகை பறிப்பு :

செய்திப்பிரிவு

திருநெல்வேலி: திருநெல்வேலி தச்சநல்லூரைச் சேர்ந்த குமாரசாமி மனைவி லீலா(78). இவர் வீட்டில் டிவி பார்த்துக்கொண்டிருந்தார். அப்போது அடையாளம் தெரியாத 4 பேர் திடீரென அவரது வீட்டுக்குள் புகுந்தனர். கத்தியை காட்டி மிரட்டி, லீலா கழுத்தில் கிடந்த 5 சவரன் நகையை பறித்துக்கொண்டு தப்பிவிட்டனர். தச்சநல்லூர் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

SCROLL FOR NEXT