Regional03

இளைஞர் கொலை வழக்கில் திருப்பூரில் ஒருவர் கைது :

செய்திப்பிரிவு

திருப்பூர் மத்திய காவல் நிலைய எல்லைக்குட்பட்ட தென்னம்பாளையம் உழவர் சந்தை பின்புறம் உள்ள ஏபிடி சாலையில் பழைய துணிகளை பிரிக்கும் வேஸ்ட் குடோனில், நேற்று முன்தினம் இளைஞர் சடலமாக மீட்கப்பட்டார். இது தொடர்பாக போலீஸார் விசாரித்து வந்தனர்.

இறந்தவர் எம்.ஜி.ஆர் காலனியை சேர்ந்த சம்சுதீன் (23) என்பது தெரியவந்தது. நேற்று முன்தினம் காலை வீட்டில் இருந்து சென்றவர், பின்னர் வீடு திரும்பவில்லை. இதையடுத்து அவரது அலை பேசிக்கு குடும்பத்தினர் பலமுறை தொடர்பு கொண்டபோது அணைத்து வைக்கப் பட்டிருந்தது.

இதுதொடர்பாக குடும்பத்தி னர் மற்றும் நண்பர்கள் போலீஸாரிடம் தகவல் அளித்தனர்.

இதற்கிடையே ஏபிடி சாலையில் உள்ள வேஸ்ட் குடோனில் சடலமாக மீட்கப் பட்டவர் சம்சுதீன் என்பது உறுதியானது.

இதுதொடர்பாக திருப்பூர் கேவிஆர் நகரை சேர்ந்த கார்த்தி (26) என்பவரை கைது செய்து விசாரித்தனர். முன்விரோதம் காரணமாக சம்சுதீனை கத்தியால் தாக்கி கார்த்தி கொலை செய்திருப்பது தெரியவந்துள்ளது.

இதையடுத்து, அவரை போலீஸார் கைது செய்தனர். மேலும், இருவரை தேடி வருகின்றனர்.

SCROLL FOR NEXT