முழு ஊரடங்கு காரணமாக பூட்டி சீல் வைக்கப்பட்டுள்ள டாஸ்மாக் மதுபானக் கடைகளின் பாதுகாப்பு தொடர்பாக டாஸ்மாக் அதிகாரிகள் ஆய்வு மேற் கொண்டனர்.
சேலம் மாவட்டத்தில் 200-க்கும் அதிகமான டாஸ்மாக் கடைகள் உள்ளன. இந்நிலையில், கரோனா தொற்றுப் பரவலைத் தடுக்க முழு ஊரடங்கு அமல்படுத் தப்பட்ட நிலையில், டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டு சீல் வைக்கப்பட்டுள்ளது.
சில மாவட்டங்களில் டாஸ்மாக் கடைகளில் திருட்டு நடந்தது. இதையடுத்து, சேலம் மாவட்ட டாஸ்மாக் மேலாளர் அம்பாயிரநாதன் தலைமையிலான அதிகாரிகள், சேலத்தில் பல்வேறு இடங்களில் மூடப் பட்டுள்ள டாஸ்மாக் கடைகளை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டனர்.
இதேபோல, மேட்டூர், ஓமலூர், சங்ககிரி, எடப்பாடி உள்ளிட்ட பகுதி களிலும் ஆய்வு மேற் கொள்ளப்பட்டது.