திருநெல்வேலியில் மத்திய மாவட்ட மதிமுக செயலாளர் கே.எம்.ஏ. நிஜாம் ஏற்பாட்டில், அரிசி உள்ளிட்ட 16 நிவாரணப் பொருட்களை காது கேளாதோர், பார்வையற்றோர், வாய் பேச முடியா தோர் உள்ளிட்ட ஊனமுற்றோருக்கும், விதவைகளுக்கும் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ வின் மகன் துரை வைகோ வழங்கினார்.
பின்னர், செய்தியாளர்களிடம் அவர் கூறும்போது, “திரு நெல்வேலி, தென்காசி, விருதுநகர் மாவட்டங்களைச் சேர்ந்த காவல்துறையினருக்கு 1.5 லட்சம் முகக்கவசங்கள் வழங்கப்பட்டுள்ளன” என்றார்.