Regional03

கரோனாவுக்கு 32 பேர் மரணம் :

செய்திப்பிரிவு

திருநெல்வேலி மாவட்டத்தில் 6 பேர், தென்காசி மாவட்டத்தில் 9 பேர், கன்னியா குமரியில் 14 பேர், தூத்துக்குடியில் 3 பேர் என கரோனாவால் பாதிக்கப்பட்ட 32 பேர் நேற்று ஒரே நாளில் உயிரிழந்தனர்.

திருநெல்வேலி மாவட்டத்தில் 289 பேருக்கு தொற்று உறுதியாகியுள்ளது. தற்போது 4,249 பேர் சிகிச்சை பெறுகிறார்கள். தென்காசி மாவட்டத்தில் 306 பேருக்கு புதிதாக தொற்று உறுதியாகியுள்ளது. 3,723 பேர் சிகிச்சை பெறுகிறார்கள்.

கன்னியாகுமரி மாவட்டத்தில் நேற்று 817 பேர் பாதிக்கப்பட்டனர். 7,650 பேர் சிகிச்சையில் உள்ளனர். தூத்துக்குடி மாவட்டத்தில் நேற்று புதிதாக 344 பேருக்கு கரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.

SCROLL FOR NEXT