திருப்பத்தூரில் கருப்பு பூஞ்சை நோய்க்கு மேலும் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
திருப்பத்தூர் மாவட்டம் மண்டல நாயணகுண்டாவைச் சேர்ந்தவர் கூலித்தொழிலாளி ரமேஷ்(43). இவர், கடந்த வாரம் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு திருப்பத்தூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டிருந்தார். இந்நிலையில், அவரது கண்ணில் திடீரென வீக்கம் ஏற்பட்டது.
இதைத்தொடர்ந்து, அவரை மருத்துவர்கள் பரிசோதனை செய்தனர். அப்போது, அவருக்கு கருப்பு பூஞ்சை நோய் ஏற்பட்டது தெரியவந்தது. தொடர்ந்து, சிகிச்சை பெற்று வந்த ரமேஷ் நேற்று முன்தினம் இரவு பரிதாபமாக உயிரிழந்தார்.