திருப்பூர் வெள்ளியங்காடு முத்தையன் கோயில் அருகே நியாய விலைக்கடையில் டோக்கன் வாங்க திரண்ட பொதுமக்கள். 
Regional02

கோவை செய்தியில் சேர்க்க :

செய்திப்பிரிவு

திருப்பூர்

2-ம் கட்ட நிவாரண தொகை வாங்குவதற்கான டோக்கன்கள் திருப்பூரில் பல்வேறு பகுதிகளில் உள்ள நியாய விலைக் கடைகளில் நேற்று வினியோகம் செய்யப்பட்டன. இதுகுறித்து தகவல் அறிந்ததும் பொதுமக்கள் பலரும் நியாய விலைக் கடைகளில் திரண்டனர். சில இடங்களில் டோக்கன்கள் கடைகளுக்கு வந்த சேராததால், பொதுமக்கள் பல மணி நேரம் வரிசையில் காத்திருந்து ஏமாற்றமடைந்தனர். குடும்ப அட்டைதாரர்களின் வீடுகளுக்கே சென்று டோக்கன் வழங்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்ட நிலையில், திருப்பூரில் பொதுமக்களை நியாயவிலைக் கடைக்கு அழைத்து கூட்டம் சேர்த்தது அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.

SCROLL FOR NEXT