Regional01

கடலூர் மாவட்டத்தில் : 3 பேருக்கு கருப்பு பூஞ்சை தொற்று :

செய்திப்பிரிவு

கடலூர் மாவட்டத்தில் கருப்புபூஞ்சை நோயால் 3 பேர் உயிரிழந்த நிலையில், 9 பேருக்குபாதிப்பு உறுதிப் படுத்தப்பட்டு சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டனர். அவர்களுக்கு உரிய சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் மேலும் 3 பேருக்கு கருப்பு பூஞ்சை தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இதில், புவனகிரியைச் சேர்ந்த 38 வயது ஆண், விருத்தாசலத்தைச் சேர்ந்த 60 வயது ஆண் ஆகியோர் கடலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். இவர்கள் கரோனா தொற்றுக்கு உள்ளாகி சிகிச்சை பெற்று வந்த நிலையில் கருப்பு பூஞ்சை தொற்று ஏற்பட்டுள்ளது. இது போலவேப்பூரைச் சேர்ந்த 48 வயது ஆணுக்கு கருப்பு பூஞ்சை உறுதிப்படுத்தப்பட்டது. அவர் முண்டிம்பாக்கம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப் பட்டுள்ளார்.

SCROLL FOR NEXT