சேலம் மாவட்டத்தில் நேற்று 1,290 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதில், சேலம் மாநகராட்சிப் பகுதியில் 523 பேரும், மேட்டூரில் 18, ஆத்தூரில் 6, வீரபாண்டியில் 89, சங்ககிரியில் 73, ஓமலூரில் 71, எடப்பாடியில் 53, அயோத்தியாப்பட்டணத்தில் 51, வாழப்பாடியில் 39, கொங்கணாபுரம், மகுடஞ்சாவடியில் தலா 31 என மாவட்டம் முழுவதும் 1,290 பேர் தொற்றால் பாதிக்கப்பட்டனர்.
சுகாதாரத்துறை அறிவிப்பின்படி, ஈரோட்டில் நேற்று 1488 பேருக்கு கரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. சிகிச்சை பெற்று வந்தவர்களில் 1538 பேர் குணமடைந்துள்ளனர். 25 பேர் உயிரிழந்துள்ளனர். மாவட்டத்தில் கரோனா தொற்று பாதிக்கப்பட்டு தற்போது 16 ஆயிரத்து 20 பேர் சிகிச்சையில் உள்ளனர். கடந்த சில நாட்களோடு ஒப்பிடுகையில், நேற்று கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களை விட குணமடைந்தோர் எண் ணிக்கை அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.