Regional02

வாகனத்தை வழிமறித்து பணம் பறித்த புகாரில் : ஏட்டு பணியிடை நீக்கம் :

செய்திப்பிரிவு

குட்கா வாகனத்தை வழிமறித்து, ரூ.2.5. லட்சம் பணம் பறித்த புகாரில், குருபரப்பள்ளி தலைமைக் காவலரை பணியிடை நீக்கம் செய்து கிருஷ்ணகிரி எஸ்பி உத்தரவிட்டார்.

கிருஷ்ணகிரி மாவட்டம் குருபரப்பள்ளி காவல் நிலையத்தில் தலைமைக் காவலராக பணிபுரிந்து வருபவர் மதியழகன். இவர் குருபரப்பள்ளி காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதியில் வாகனத் தணிக்கையின் போது குட்கா வாகனத்தை வழிமறித்து, வழக்குப் பதிவு செய்யாமல் இருக்க ரூ.2 லட்சத்து 50 ஆயிரம் பறித்ததாக குற்றச்சாட்டு எழுந்தது.

இதுதொடர்பாக விசாரணை நடத்திட, கிருஷ்ணகிரி எஸ்பி பண்டிகங்காதர் உத்தரவிட்டார். விசாரணையில் தலைமை காவலர் பணம் வாங்கியது தெரிந்தது. இதனைத் தொடர்ந்து மதியழகனை, பணியிடை நீக்கம் செய்து, கிருஷ்ணகிரி எஸ்பி உத்தரவிட்டார்.

SCROLL FOR NEXT