ரேஷன் கடைகளில் 14 வகையான மளிகை பொருட்கள் அடங்கிய தொகுப்பை பெற வீடுகளுக்கு சென்று டோக்கன் விநியோகம் செய்யும் பணி தொடங்கியது.
கரோனா ஊரடங்கு காலத்தில் பொதுமக்கள் பயன் பெறும் வகையில் ரேஷன் கார்டுதாரர் களுக்கு ரேஷன் கடைகள் மூலம் கோதுமை மாவு, சர்க்கரை, ரவை உள்ளிட்ட 14 வகையான மளிகை பொருட்கள் அடங்கிய தொகுப்பு வழங்க அரசு உத்தரவிட்டுள்ளது.
இதையடுத்து, இத்தொகுப்பை பெற வீடுகளுக்கு சென்று ரேஷன் கடை ஊழியர்கள் டோக்கன் விநியோகம் செய்யும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதுதொடர்பாக சேலம் மாவட்ட வழங்கல் துறை பிரிவு அலுவலர்கள் கூறியதாவது:
சேலம் மாவட்டத்தில் 10 லட்சத்து 30 ஆயிரம் ரேஷன் கார்டுதாரர்கள் 1,571 ரேஷன்கடைகள் மூலமாக பொருட்கள் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. அரசு வழங்கும் மளிகை பொருள் தொகுப்பை மக்கள் நெரிசலின்றி பெற்றுச் செல்லும் வகையில், ரேஷன் கார்டுதாரர்களின் வீடுகளுக்கு சென்று டோக்கன் வழங்கி வருகிறோம்.
டோக்கனில் குறிப்பிட்டுள்ள நாள் மற்றும் நேரத்தில் மக்கள் சென்று தொகுப்பை பெற்று கொள்ளலாம்.இவ்வாறு அவர்கள் கூறினர்.
ஈரோட்டில் டோக்கன் விநியோகம்