திருநெல்வேலி மாவட்டத்தில் செல்போன் காணாமல் போனதாக, பல்வேறு காவல் நிலையங்களுக்கு வந்த புகார்களின் பேரில், ரூ. 6.7 லட்சம் மதிப்புள்ள 50 செல்போன்களை போலீஸார் மீட்டுள்ளனர்.
சைபர் கிரைம் ஏஎஸ்பி சீமைசாமி தலைமையிலான குழுவினர், திருட்டுபோன 50 செல்போன்களை, அதன் ஐ.எம்.இ.ஐ. எண்ணை வைத்து கண்டுபிடித்து, அவற்றை பறிமுதல் செய்தனர். இந்த செல்போன்களை அந்தந்த காவல் நிலைய காவலர்களிடம் எஸ்பி நெ.மணிவண்ணன் ஒப்படைத்தார்.
ஏஎஸ்பி கூறும்போது, ``ஊரடங்கு விதிமுறைகள் அமலில் இருப்பதால், பொதுமக்கள் வெளியே வர முடியாது. எனவே, போலீஸார் நேரடியாக உரியவர்களின் வீட்டுக்கே சென்று, செல்போன்களை ஒப்படைப்பர். வங்கி விவரங்கள், உங்களுடைய தனிப்பட்ட விவரங்கள் மற்றும் புகைப்படங்களை செல்போனில் பதிவு செய்து வைக்காதீர்கள்” என்று தெரிவித்தார்.