சிதம்பரம் அருகே சி.முட்லூர் அரசு கலைக் கல்லூரி கரோனா பராமரிப்பு மையத்தில் கரோனா தொற்றாளர்களிடம் ஆட்சியர் பாலசுப்ரமணியம் குறைகளை கேட்டறிந்தார். 
Regional02

பரங்கிப்பேட்டை கரோனா மையத்தில் ஆட்சியர் ஆய்வு :

செய்திப்பிரிவு

பரங்கிப்பேட்டை ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட சிதம்பரநாதன்பேட்டை மற்றும் கொத்தங்குடி பகுதியில் கரோனா தடுப்பு நடவடிக்கையாக நடைபெற்று வரும் சிறப்பு காய்ச்சல் முகாமினை மாவட்ட ஆட்சியர் பாலசுப்ரமணியம் நேற்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

பி.முட்லூர் மற்றும் கீழ்அனுவம்பட்டு பகுதியில் கரோனா தொற்று காரணமாக தடைசெய்யப்பட்ட பகுதியாக அறிவிக்கப்பட்ட இடத்தை ஆட்சியர் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

பின்னர் ஆட்சியர் தெரிவித் தாவது: தடை செய்யப்பட்ட பகுதியில் வீடு வீடாகச் சென்று சளி, காய்ச்சல் பரிசோதனைகளை மேற்கொள்ள வேண்டும். வெளியூரில் இருந்து வரும் நபர்களை கண்டறிந்து அவர்களை தனிமைப்படுத்தி கரோனா பரிசோதனை மேற்கொள்ள வேண்டும்.

தொடர்ந்து சிதம்பரம் சி.முட்லூர் அரசு கலைக் கல்லூரியில் கரோனா பராமரிப்பு

மையத்தில் கரோனா தொற்று பாதிப்பினால் சிகிச்சை பெற்று வருபவர்களிடம், சுகாதாரமான உணவு மற்றும் குடிநீர் வழங்க படுகிறதா? மைய வளாகங்களில் கிருமிநாசினி கொண்டு சுத்தம் செய்யப்படுகிறதா? கழிப் பறைகளில் தூய்மைப் பணிகள் மேற்கொள்ளப்படுகிறதா? என்று ஆட்சியர் கேட்டறிந்தார்.

SCROLL FOR NEXT