Regional01

மத்திய அரசை கண்டித்து எஸ்டிபிஐ ஆர்ப்பாட்டம் :

செய்திப்பிரிவு

13 மாநிலங்களில் குடியுரிமை சட்டத்தை நடைமுறைப்படுத்தும் மத்திய அரசைக் கண்டித்து பெரம்பலூர் மாவட்டத்தில் நேற்று 4 இடங்களில் எஸ்டிபிஐ கட்சியினர் தங்களது வீடுகளின் முன் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட் டனர்.

அதன்படி, பெரம்பலூர் மாவட்டம் சத்திரமனையில் மாவட்டத் தலைவர் முஹம்மது ரபிக், பெரம்பலூரில் மாவட்டச் செயற்குழு உறுப்பினர் அகமது இக்பால், வி.களத்தூரில் மாவட்ட துணைத்தலைவர் முஹம்மது பாரூக், லப்பைக்குடிகாட்டில் மாவட்ட பொதுச்செயலாளர் அப்துல் கனி ஆகியோர் தலைமையில் இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இந்த ஆர்ப்பாட்டத்தில் குடியுரிமை சட்டத்தை அமல்படுத் தும் முடிவை கைவிடக்கோரியும், மத்திய அரசை கண்டித்தும் முழக்கங்கள் எழுப்பப்பட்டன.

SCROLL FOR NEXT