Regional01

தடுப்பூசி பற்றாக்குறை; பள்ளியில் மக்கள் முற்றுகை போராட்டம் :

செய்திப்பிரிவு

கரூர் நகராட்சி பசுபதீஸ்வரா பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் கரோனா தடுப்பூசி முகாம் நேற்று நடைபெற்றது.

தடுப்பூசி போட்டு கொள்வதற்காக காலை முதலே ஏராளமானோர் வரிசையில் காத்திருந்தனர். அப்போது, 150 தடுப்பூசிகள் மட்டுமே வந்துள்ளன. ஏற்கெனவே கஸ்தூரிபாய் நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையத்தில் டோக்கன் பெற்றவர்களுக்கு மட்டுமே தடுப்பூசி போடப்படும் என தெரிவிக்கப்பட்டது. இதனால், ஆத்திரமடைந்த பொதுமக்கள் பள்ளியை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தகவலறிந்த கஸ்தூரிபாய் நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவர் திவ்யா அங்கு சென்று அவர்களை சமாதானப்படுத்தி, தடுப்பூசி வந்தபின் தகவல் தெரிவிக்கப் படும் எனக் கூறினார். மேலும், ஏற்கெனவே டோக்கன் வாங்காத வர்களுக்கு ஜூன் 7-ம் தேதி தடுப்பூசி செலுத்திக் கொள்ள டோக்கன் வழங்கப்பட்டது.

SCROLL FOR NEXT