Regional01

விவசாயி அடித்துக் கொலை :

செய்திப்பிரிவு

அரியலூர் மாவட்டம் சிறுவ ளூர் கிராமத்தைச் சேர்ந்தவர் கள் சாமிநாதன்(55), கோவிந்த ராஜ்(56). விவசாயிகளான இரு வரும் உறவினர்கள். இந்நிலை யில் நேற்று முன்தினம் சாமிநாதன் மனைவி செல்லப்பாங்கி(40) அருகிலுள்ள தங்கதுரை என்பவரது தோட்டத்தில் கருவேப்பிலை பறித்துள்ளார். அப்போது, கோவிந்தராஜன் மனைவி சின்னபொண்ணு(45) செல்லப்பாங்கியை கிண்டல் செய்துள்ளார்.

இதுதொடர்பாக ஏற்பட்ட தகராறில் சின்னப்பொண்ணுவின் கணவர் கோவிந்தராஜ், அவரது மகன் தர்மராஜ்(27) ஆகியோர் சாமிநாதனிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டதுடன், உருட்டு கட்டை யால் கடுமையாக தாக்கியுள்ளனர்.

இதில் பலத்த காயமடைந்த சாமிநாதன், தஞ்சாவூர் மருத்து வக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இது குறித்து அரியலூர் போலீஸார் நேற்று வழக்கு பதிவு செய்து தலைமறைவான கோவிந்தராஜ், அவரது மகன் தர்மராஜ் ஆகியோரை தேடி வருகின்றனர்.

SCROLL FOR NEXT