தி.மலை மாவட்டம் வந்தவாசி அகிலாண்டேஸ்வரி மகளிர் கல்லூரி சார்பில் முதல்வரின் கரோனா நிவாரண நிதிக்கு ரூ.1 லட்சம் நிதி உதவி வழங்கப்பட்டது.
வந்தவாசி அகிலாண் டேஸ்வரி மகளிர் கல்லூரி சார்பில் (சுவாமி அபேதானந்தா கல்வி அறக்கட்டளை) முதல்வரின் கரோனா நிவாரண நிதிக்கு ரூ.1 லட்சத்துக்கான காசோலையை துணை சபாநாயகர் கு. பிச்சாண்டி யிடம் கல்லூரி செயலாளரும், திருவள்ளுவர் பல்கலைக் கழக முன்னாள் ஆட்சி மன்ற குழு உறுப்பினருமான ரமணன் வழங்கினார். அப்போது, ஆட்சியர் சந்தீப் நந்தூரி உள்ளிட்டோர் உடனிருந்தனர்.