Regional01

ஈரோடு மாநகராட்சி இணையதளத்தில் - வீடுகளுக்கே வந்து பொருட்களை வழங்கும் மளிகைக் கடைகளின் பட்டியல் வெளியீடு :

செய்திப்பிரிவு

வீடுகளுக்கு மளிகைப் பொருட் களைக் கொண்டு வந்து சேர்க்கும் மளிகைக்கடைகளின் பெயர் மற்றும் தொலைபேசி எண்கள் கொண்ட பட்டியல் ஈரோடு மாநகராட்சி இணையதளத்தில் சேர்க்கப்பட்டுள்ளது.

கரோனா பரவலைத் தடுக்க ஊரடங்கு அமலில் உள்ள நிலையில், ஈரோடு மாநகராட்சிக் குட்பட்ட பகுதிகளில் காய்கறிகள் மற்றும் மளிகைப் பொருட்கள் வாகனங்கள் மூலம் விற்பனை செய்ய நடவடிக்கை எடுக்கப் பட்டுள்ளது. தற்போது ஊரடங்கு மீண்டும் நீட்டிக்கப்பட்டுள்ள நிலை யில், காய்கறிகள், பழங்கள் விற்பனை செய்ய அதிக எண்ணிக்கையில் வாகனங்கள் இயக்கப்படுகிறது. இந்நிலையில், மளிகைப் பொருட்கள் கிடைப்பதில் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து மளிகைப் பொருட்களை பொது மக்கள் பெறுவதற்காக மாநகராட்சி சார்பில் இணையதளம் தொடங்கப் பட்டுள்ளது.

இதுதொடர்பாக மாநகராட்சி ஆணையர் இளங்கோவன் கூறியதாவது:

ஈரோடு மாநகராட்சி இணையதள முகவரியில் (tnurbantree.tn.gov.in/erode/ - Grocery Contact Numbers) மளிகைக் கடைகளின் பெயர்கள், அவர்களது செல்போன் எண், முகவரி, இ.மெயில் முகவரி கொடுக்கப்பட்டுள்ளது. இந்த எண்களை பயன்படுத்தி, பொதுமக்கள் தங்களுக்குத் தேவையான மளிகைப் பொருட்களை குறிப்பிட்டால், கடைக்காரர் கள் வீடுகளுக்கு பொருட்களை அனுப்பி வைப்பார்கள்.

இவ்வாறு அவர் கூறினார்.

SCROLL FOR NEXT