குமாரபாளையம் காவல் துறையினர் கரோனா தொடர்பான குறும்படம் தயாரித்து அதனை இணையதளத்தில் வெளியிட்டனர். 
Regional01

கரோனா விழிப்புணர்வு குறும்படம் குமாரபாளையம் போலீஸார் வெளியீடு :

செய்திப்பிரிவு

குமாரபாளையம் காவல் துறையினர் கரோனா தொற்று பரவல் தொடர்பான குறும்படத்தை தயாரித்து அதனை இணையதளத்தில் வெளியிட்டுள்ளனர்.

கரோனா தொற்று பரவலைத் தடுக்க சுகாதாரத் துறையினர் பல்வேறு நோய் தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். இதுபோல் காவல் துறையினர் விழிப்புணர்வு ஊர்வலம், கலை நிகழ்ச்சிகள் உள்ளிட்டவற்றை நடத்தி வருகின்றனர். இதன் ஒருபகுதியாக குமாரபாளையம் காவல் துறையினர் கரோனா விழிப்புணர்வு குறும்படம் ஒன்றை தயாரித்துள்ளனர்.

இதனை இணைய தளத்தில் வெளியிடும் நிகழ்வு குமாரபாளையம் காவல் நிலையத்தில் நடைபெற்றது. காவல் ஆய்வாளர் ரவி இதனை இணையதளத்தில் வெளியிட்டார். இதில் கரோனா தொற்று பாதிப்பு, சிகிச்சை பெறும் வழிமுறைகள் உள்ளிட்ட கரோனா தொடர்பாக விழிப்புணர்வு ஏற்படுத்தும் காட்சிகள் இடம் பெற்றுள்ளன. இதில் காவலர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

SCROLL FOR NEXT