Regional02

செங்கல்பட்டு மற்றும் புறநகர் பகுதியில் - அடிக்கடி மின்வெட்டால் மக்கள் அவதி :

செய்திப்பிரிவு

செங்கல்பட்டு நகரம் மற்றும் புறநகர் பகுதிகளில் கடந்த சில நாட்களாக அவ்வப்போது மின்வெட்டு ஏற்படுவதாக புகார் எழுகிறது. இரவிலும் மின்வெட்டு உள்ளதால் அனைத்து தரப்பினரும் பாதிக்கப்படுகின்றனர். கரோனா தொற்று ஏற்பட்ட பலர் தங்களை தனிமைப்படுத்திக் கொள்ள இயலாத நிலை உள்ளது.

இதுகுறித்து மின் வாரியத்தினர் கூறும்போது, "சமீபத்தில் மழை பெய்ததால் பல இடங்களில் இன்சுலேட்டர் வெடித்துவிட்டது. அதைக் கண்டுபிடித்து சீரமைப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. மேலும் கடந்த சில மாதங்களாகவே பராமரிப்பு பணிகள் நடைபெறவில்லை. இதுவும் மின் தடைக்கு ஒரு காரணம்.

தற்போது அனைத்தும் சரி செய்யப்பட்டு, மின் விநியோகம் சீராக உள்ளது. செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் கரோனா சிகிச்சை வார்டு உள்ளதால் மின்தடை ஏற்படாதவாறு கவனமுடன் செயல்படுகிறோம்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

SCROLL FOR NEXT