விபத்தில் மரணமடைந்த சிறப்பு உதவி ஆய்வாளர் சுப்பிரமணியன் 
Regional02

விபத்தில் சிறப்பு உதவி ஆய்வாளர் மரணம் :

செய்திப்பிரிவு

தூத்துக்குடி மாவட்டம் முத்தையாபுரம் காவல் நிலையத்தில் சிறப்புஉதவி ஆய்வாளராக பணியாற்றியவர் சுப்பிரமணியன்(54). தற்போது சிறப்பு அலுவலராக தூத்துக்குடி நகர காவல் துணை கண்காணிப்பாளர் அலுவலகத்தில் பணியாற்றி வந்தார். கடந்த 22.05.2021 அன்று காலை பணி நிமித்தமாக இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தபோது, தூத்துக்குடி ஜார்ஜ் சாலை தஸ்நேவிஸ் பள்ளி அருகில் கீழே விழுந்ததில் காயமடைந்தார்.

தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, பின்னர் தனியார் மருத்துவமனைக்கு மாற்றப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். ஆனால்,சிகிச்சை பலனின்றி நேற்றுமுன்தினம் அவர் உயிரிழந்தார். இறுதிச்சடங்குகள் சொந்த ஊரான செக்காரக்குடியில் நேற்று நடைபெற்றது. காவல்துறையினரின் அணிவகுப்பு மரியாதையுடன் 30 குண்டுகள் முழங்க அவரது உடல் தகனம் செய்யப்பட்டது. இறுதிச்சடங்கில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ்.ஜெயக்குமார், டிஎஸ்பிக்கள் கணேஷ், பொன்னரசு, பிரகாஷ் மற்றும்போலீஸார் கலந்து கொண்டு மலர்வளையம் வைத்து அஞ்சலிசெலுத்தினர். விபத்தில் மரணமடைந்த சிறப்பு உதவி ஆய்வாளர் சுப்பிரமணியன், கடந்த1988-ம் ஆண்டு இரண்டாம் நிலைக்காவலராக பணியில் சேர்ந்து பணியாற்றியுள்ளார். அவருக்கு வெங்கடலெட்சுமி என்ற மனைவியும், துர்காதேவி என்ற மகளும், செந்தில் முருகன் என்ற மகனும் உள்ளனர்.

SCROLL FOR NEXT