Regional01

வீட்டில் சாராயம் காய்ச்சியவர் கைது :

செய்திப்பிரிவு

தென்காசி மாவட்டம் கடையநல்லூர், இந்திரா நகர் பகுதியில் வீட்டில் வைத்து சாராயம் காய்ச்சுவதாக போலீஸாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அப்பகுதிக்குச் சென்று, போலீஸார் சோதனை நடத்தினர். அங்கு தனது உறவினர் வீட்டில் வைத்து குக்கர் மூலம் சாராயம் காய்ச்சிய மேலக்கடையநல்லூரைச் சேர்ந்த சந்திரன் (36) என்பவரை போலீஸார் கைது செய்தனர். மேலும், கனி என்பவரை தேடிவருகின்றனர்.

இதேபோல், சேர்ந்தமரம் அருகே உள்ள கடையாலுருட்டியில் உள்ள ஒரு தோட்டத்தில் கள்ளச்சாராயம் காய்ச்சுவதாக போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து, போலீஸார் அங்கு சென்றுசோதனையிட்டனர். 70 லிட்டர் சாராய ஊறல் பறிமுதல் செய்யப்பட்டது. இது தொடர்பாக கடையாலுருட்டியைச் சேர்ந்த மயில்ராஜ் (40),சாமி சங்கர் (55), சாம்பவர் வடகரையைச் சேர்ந்த ஈஸ்வரன் (56) ஆகியோரை போலீஸார் கைது செய்தனர்.

SCROLL FOR NEXT