திருநெல்வேலி மாவட்டம், தேவர்குளத்தைச் சேர்ந்தவர் செல்வம் (50). இவர், தேவர்குளம் விலக்கு அருகே இருசக்கர வாகனத்தில் சென்ற போது, அந்த வழியாக வந்த மற்றொரு இருசக்கர வாகனம் மோதியது. இதில் பலத்த காயம் அடைந்த செல்வம் உயிரிழந்தார். இதுகுறித்து தேவர்குளம் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.