Regional02

ஓசூர், கிருஷ்ணகிரி, தருமபுரி வழியாக - கர்நாடக மாநிலத்தில் இருந்து மதுபானங்கள் கடத்த முயன்ற 18 பேர் கைது : மதுபாட்டில்கள், வாகனங்கள் பறிமுதல்

செய்திப்பிரிவு

கர்நாடக மாநிலத்தில் இருந்து ஓசூர், கிருஷ்ணகிரி, தருமபுரி வழியாக மதுபானம் கடத்த முயன்ற 18 பேரை போலீஸார் கைது செய்தனர்.

ஓசூர் ஜுஜுவாடி சோதனைச் சாவடியில் மதுவிலக்கு போலீஸார் வாகனச் சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, பெங்களூருவில் இருந்து வந்த சரக்கு வாகனத்தில் சோதனை நடத்தினர்.

இதில் 500-க்கும் மேற்பட்ட மதுபாக்கெட்களை கடத்த முயன்ற கோவையைச் சேர்ந்த அருண்குமார் (29), உசேன்செரிப் (31) ஆகிய இருவரையும் கைது செய்தனர். மேலும், அவர்களிடமிருந்து மது பாக்கெட்டுகள் மற்றும் சரக்கு வாகனத்தை பறிமுதல் செய்தனர்.

பதுக்கி விற்றவர் கைது

கிருஷ்ணகிரியில் 5 பேர் கைது

ஊத்தங்கரையில் மது விலக்கு பிரிவு போலீஸார் வாகன தணிக்கையில் ஈடுபட்ட போது, அவ்வழியாக வந்த வாகனத்தில் 576 கர்நாடக மாநில மதுபாட்டில்களை கடத்தி வந்த கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூர் அடுத்த மணலூர்பேட்டை பகுதியைச் சேர்ந்த ஓட்டுநர் செல்வராஜ் (27), மணிகண்டன் (29) ஆகி இருவரையும் கைது செய்தனர்.

கண்ணண்டஹள்ளி பகுதியில் போலீஸார் நடத்திய வாகனச் சோதனையின்போது, அவ்வழியாக வந்த ஆட்டோவில் 510 கர்நாடக மாநில மதுபாட்டில்கள் கடத்தியது தெரிந்தது. இது தொடர்பாக ஓட்டுநர் சதீஷ்(29) என்பவரை போலீஸார் கைது செய்தனர். கைதானவர்களிடமிருந்து மதுபாட்டில்கள் மற்றும் வாகனங்கள் பறிமுதல் செய்யப் பட்டன.

தருமபுரியில் 11 பேர் கைது

பாலக்கோடு அடுத்த பஞ்சப்பள்ளி பகுதியில் காரில் மது கடத்தி வந்த 2 பேர், காரிமங்கலத்தில் காரில் மது கடத்திய சேலத்தைச் சேர்ந்த 3 பேர், மாட்லாம்பட்டியில் சரக்கு வாகனத்தில் மது கடத்திய ஒருவர், காரிமங்கலம் அருகே இருசக்கர வாகனத்தில் மது கடத்தி வந்த ஒருவர், சரக்கு வாகனம் ஒன்றில் மது கடத்திய ஒருவர் உட்பட தருமபுரி மாவட்டத்தில் நேற்று மதுபான கடத்தில் ஈடுபட்ட 11 பேரை போலீஸார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து மதுபாட்டில் மற்றும் வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

SCROLL FOR NEXT