Regional02

தடுப்பூசிக்காக காத்திருக்கும் மின் வாரிய தொழிலாளர்கள் :

செய்திப்பிரிவு

தற்போது, செங்கல்பட்டு மின் பகிர்மான வட்டத்தில் 50-க்கும் மேற்பட்டோர் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும், 7 பேர் உயிரிழந்துள்ளனர். செங்கல்பட்டு மின் பகிர்மான வட்ட அலுவலகங்களில் 150-க்கும் மேற்பட்டோர் பணிபுரிந்து வருகின்றனர். இதில் சிலர் மட்டுமே தடுப்பூசி போட்டுக்கொண்டுள்ளனர். தொழிலாளர்கள், அலுவலர்கள் பலருக்கு தொற்று ஏற்பட்டதால், அனைவருக்கும் தடுப்பூசி போட வேண்டுமென மாவட்ட நிர்வாகத்திடம் மனு அளிக்கப்பட்டது. ஆனால் போதிய அளவு தடுப்பூசி இல்லாததால், கூடுதலாக தடுப்பூசி வந்தவுடன் முகாம் நடத்தி, தடுப்பூசி போடப்படும் என சுகாதாரத் துறையினர் தெரிவித்துள்ளனர். விரைவில் தடுப்பூசி போட தொழிற்சங்கத்தினர் வலியுறுத்தி உள்ளனர்.

SCROLL FOR NEXT