Regional01

உரக்கடைகள் காலை 6 முதல் 10 மணி வரை செயல்பட அனுமதி : ஈரோடு வேளாண் இணை இயக்குநர் தகவல்

செய்திப்பிரிவு

ஊரடங்கின் போதும், விவசாயி களுக்கு வேளாண் இடுபொருட்கள் தடையின்றி கிடைக்கும் வகை யில் உரக்கடைகள் திறக்க அனுமதிக்கப்பட்டுள்ளதாக வேளாண்மைத் துறை தெரிவித்துள்ளது.

இதுதொடர்பாக ஈரோடு வேளாண்மை இணை இயக்குநர் சி.சின்னசாமி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

குறுவை நெல் பயிர் உட்பட அனைத்து பயிர்களின் சாகு படிக்குத் தேவையான உரங்கள், விதைகள், பூச்சிமருந்துகள் தடையின்றி கிடைக்கும் வகையில் உரக்கடைகள் காலை 6 மணி முதல் 10 மணி வரை திறந்திருக்க அரசு அனுமதி வழங்கியுள்ளது . அதன் படி ஈரோடு மாவட்டத்தில் அரசு அனுமதி பெற்ற 575 தனியார் மற்றும் கூட்டுறவு உரக்கடைகளும் திறக்கப்பட்டு, அரசின் கரோனா தடுப்பு விதிகளை பின்பற்றி விற்பனை மேற்கொள்ள அனு மதிக்கப்பட்டுள்ளது.

ஈரோடு மாவட்டத்திற்கு ரயில் மூலம் 435 மெட்ரிக் டன் பேக்டம்பாஸ் உரம் வந்துள்ளது. தற்போது யூரியா உரம் 5223 மெட்ரிக் டன்னும், டிஏபி 1301 மெட்ரிக் டன்னும், பொட்டாஷ் 2955 மெட்ரிக் டன்னும், காம்ப்ளக்ஸ் உரம் 6343 மெட்ரிக் டன் என மொத்தம் 16 ஆயிரத்து 257 டன் உரம் விற்பனை நிலையங்களில் இருப்பு வைக்கப்பட்டுள்ளது. உர விற்பனையாளர்கள் அரசு நிர்ணயிக்கப்பட்ட விலைக்கு மேல் உரங்களை விற்பனை செய்தால், கடுமையான நடவடிக்கை எடுக்கப் படும். இவ்வாறு தெரிவிக்கப் பட்டுள்ளது.

இந்நிலையில், உரங்கள், விதைகள், பூச்சிமருந்துகள் தங்கு தடையின்றி விவசாயிகளுக்கு கிடைப்பதை உறுதிப்படுத்தும் வகையில், வேளாண் இணை இயக்குநர் சின்னசாமி, சென்னி மலை மற்றும் ஈரோடு வட்டார பகுதிகளில் உரம் மற்றும் பூச்சி மருந்துக் கடைகளை ஆய்வு செய்தார்.

SCROLL FOR NEXT