கரோனா தொற்று பரவலை தடுக்க தளர்வில்லா முழு ஊரடங்கு அமலில் உள்ளது. இதையொட்டி, சேலம் மாவட்டப் பகுதிகள் மற்றும் மாநகர பகுதிகளில் போலீஸார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலை யில், கரோனா தடுப்பு விதிகளை மீறி தேவையின்றி சாலைகளில் நடமாடிய 234 பேர் மீது போலீஸார் வழக்குப் பதிவு செய்தனர்.
மேலும், முகக் கவசம் அணியாமல் வந்த 246 பேருக்கும், சமூக இடைவெளியைப் பின் பற்றாத 45 பேருக்கும் போலீஸார் அபராதம் விதித்தனர்.
இதேபோல, மாவட்ட பகுதி களில் ஊரடங்கை மீறிய 479 பேர் மீது போலீஸார் வழக்குப் பதிவு செய்தனர். முகக் கவசம் அணியாத 253 பேர், சமூக இடைவெளியைப் பின்பற்றாத 17 பேருக்கு அபராதம் விதிக்கப்பட்டது.